ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்து போகும்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். திலீப்புடன் மலையாளத்தில் 'கிங் லையர்', நாகசைத்தன்யாவுடன் 'ப்ரேமம்' தெலுங்கு ரீமேக்கில் நடித்த மடோனா, சமீபத்தில், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 'கவண்' படம் வெளியானது. தனுஷுக்கு ஜோடியாக மடோன்னா நடித்துள்ள 'ப.பாண்டி' இன்று வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், சமூக வலைதளமான டுவிட்டரில் மடோன்னா பெயரில் ஏற்கெனவே ஏகப்பட்ட போலி அக்கவுண்ட் புழக்கத்தில் உள்ளன. மடோனாவின் பெயரில் இருப்பதால் அவற்றை உண்மையான ஐடி என்று எண்ணி பல ரசிகர்கள் அதை எல்லாம் பாலோ பண்ணி வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய பெயரில் உலா வரும் போலி கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் நுழைந்துள்ளார் மடோனா. @MadonnaSebast14 என்ற தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலிருந்து முதல் டுவிட்டையும் பகிர்ந்துள்ளார்.