தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை' என சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருபவர் சி.வி.குமார். தனது 'திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் பேனரில் இவர் தயாரிப்பது எல்லாமே சின்ன பட்ஜெட் படங்கள்தான். அதை நியாயமான லாபம் வைத்து தன்னுடைய நண்பர்களான அபினேஷ் இளங்கோவன், ஞானவேல்ராஜாவுக்கு விற்பார்.
இதையே தன்னுடைய பிசினஸ் ஃபார்முலாவாக வைத்திருக்கும் சி.வி.குமார் தற்போது இயக்குநராக மாறி 'மாயவன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அவரே கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குநர் நலன் குமாரசாமி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். யாருடா மகேஷ், மாநகரம் ஆகிய படங்களில் நடித்த சந்தீப் கிஷன் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக 'பிரம்மன்' படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். மேலும், ஜாக்கி சேராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துவரும் இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகிவரும் மாயவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், படத்தின் இசையை வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு 'திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்' ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வாக வெளியிட உள்ளனர்.