வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள சினிமாவில் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படம் மூலமாக ஹீரோயினாக அடியெடுத்துவைத்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்தததாக நிவின்பாலிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள 'சகாவு' படம் நாளை வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் கேரளாவில் நடைபெற்ற 'சகாவு' படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்..
அப்படி கலந்துவிட்டு காரில் திரும்பி வரும் வழியில் ஒரு பிரமாண்டமான வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனரை பார்த்தவருக்கு சின்னதாக ஷாக்.. அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த பெண் அவரைப்போலவே இருந்தது தான் காரணம். உடனே காரை நிறுத்தி அந்தப்படத்தை உற்று பார்த்தவர், “அட கிட்டத்தட்ட என்னை மாதிரியே இருக்கிறாரே” என ஆச்சர்யத்துடன் அந்த விளம்பரத்தையும் போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.