இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
உலக கிரிக்கெட் அரங்கில் அசத்திய சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார். தற்போது சச்சின், தன் சொந்த வாழ்க்கை படமான ‛சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. சச்சின், இயக்குநர் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சச்சின், ‛‛நான் ஒரு தனிமை விரும்பி. ஆனாலும் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள், கற்றவைகளை தெரிந்து கொள்ள என்னுடைய ரசிகர்கள் ஆர்வமாய் இருக்கின்றனர். ஆகையால் இந்த படத்தின் வாயிலாக என்னைப்பற்றி, என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்ல இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
சச்சின் படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் 26-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.