Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 ரூபாய்க்காக படப்பிடிப்பை நிறுத்திய போலீஸ்: ஹீரோ வேதனை

14 ஏப், 2017 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Police-stopped-shooting-for-Rs.100---Peechankai-hero-feels

கர்ஸா எண்டர்டைன்மெண்ட் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்துள்ள படம் பீச்சாங்கை. இதில் அஞ்சலி ராவ் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோவான ஆர்.எஸ்.கார்த்திக் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும் போலீஸ் டார்ச்சருடன் படத்தில் நடித்து முடித்ததாகவும் கார்த்தி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:


இடது கை பழக்கம் உள்ள ஒருவனின் கதைதான் பீச்சாங்கை. இந்தப் படம் குறும்படமாக இருந்து இப்போது திரைப்படமாக மாறியிருக்கிறது. இதனை படமாக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அதனால் நாங்களே தயாரிக்க முடிவு செய்து என் வீட்டை அடமானம் வைத்து படத்தை ஆரம்பித்தோம். அதன் பிறகு பி.ஜி.முத்தையா தயாரிப்பாளராக வந்தார்.


படத்தின் பெரும் பகுதி பொதுமக்கள் கூடும் இடத்தில் நடந்தது. எல்லா இடங்களிலும் அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஆனாலும் போலீசார் எங்களை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்தார்கள். தனியார் இடத்தில் படப்பிடிப்பு நடத்தினாலும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று பணம் கேட்டு டார்ச்சர் செய்தார்கள். சிலர் என்னை ஹீரோ என்றும் பார்க்காமல் போலீஸ் ஸ்டேஷனில் நாள் முழுக்க உட்கார வைத்தார்கள்.


பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று ஒரு நாளைக்கு பத்து போலீசாவது வந்து நிற்பார்கள். 100 ரூபாய் கொடுத்தால் போய்விடுவார்கள். 100 ரூபாயில் பொதுமக்கள் இடையூறு தீர்ந்துவிடுமா என்று கேட்கத் தோன்றும் கேட்கவில்லை. எல்லா டார்ச்சரையும் தாண்டி படத்தை முடித்தோம் என்றார் ஆர்.எஸ்.கார்த்திக்.


Advertisement
தப்பாட்டம் படத்தின் வசூல் முழுவதும் விவசாயிகளுக்கே: தயாரிப்பாளர் அறிவிப்புதப்பாட்டம் படத்தின் வசூல் முழுவதும் ... ரஜினியை விட அக்ஷ்ய்க்கு அதிக சம்பளம்.? ரஜினியை விட அக்ஷ்ய்க்கு அதிக ...


வாசகர் கருத்து (3)

pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
14 ஏப், 2017 - 17:42 Report Abuse
pollachipodiyan டாஸ்மாக் சரக்கை அடுச்சுட்டு ரோட்டுல விழுந்து கெடந்த- அது அரசு-சேவையா? ஏம்மா கண்ணு? குறும்படம் எடுப்பவனும் இந்நாட்டு குடிமகன்தான். இலவசமா எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு அரசுக்கு வரி கட்டமா இருக்கறவனும் public nuisance தான். மழைக்கு வெச்ச மரத்த, இலவச ஆட்ட, திங்க விட்டு அழிக்கறவனும் public nuisance தான். அப்படி மரத்த இலவச ஆடு மூலமா அழிக்காம விட்டிருந்தா இன்னைக்கு மலையாளத்தில் விழும் மழை தமிழ் நாட்டிலும் பெய்திருக்கும். தண்ணீர் பஞ்சம் இருந்திருக்காது. இன்னா புரிதா?. கார்த்தி, நீ இன்னாத்துக்கு அஞ்சலி ராவா ஹீரோயினா போட்டுக்கிட்டா? ஒரு நாயர், மேனன், வாரியார் பொண்ணு ஹீரோயியீனா இருந்திருந்தா போலீஸோட ஆக்டே தனி. இன்னா பிறிதா? உண்ணகூர்காரங்கோ இங்க சும்மா சும்மா படம் எடுக்க வரங்கப்பா, அதான்,மெட்ராஸ் பாஷை தொத்திகிடுச்சு. வாய்க்கால்ல கூட தண்ணி வரலப்பா? இன்ன கலக்கறது இப்போ?
Rate this:
s t rajan - chennai,இந்தியா
14 ஏப், 2017 - 15:52 Report Abuse
s t rajan இது தாண்டா தமிழக "போலீ"ஸு
Rate this:
Shiva Kumar - Chennai,இந்தியா
14 ஏப், 2017 - 15:23 Report Abuse
Shiva Kumar public nuisance நீ பண்ணலாமா.. செட்டிங்ஸ் போட்டு MGR திரைப்பட நகர்ல போய் படம் எடு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
  Tamil New Film Narai
  • நரை
  • இயக்குனர் :விவி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in