தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெளிவரும் படத்திற்காக தியேட்டரில் விற்கப்படும் டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார். ஆனால் தப்பாட்டம் என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா என்பவர், வசூலாகும் பணம் அனைத்தும் விவசாயிகளுக்கு தருவேன் என்று அறிவித்துள்ளார்.
மூன் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ள படம் தப்பாட்டம். துரை சுதாகர், டோனா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பழநிபாலு இசை அமைத்துள்ளார். ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜிபூர் ரகுமான் இயக்கி உள்ளார்.
வருகிற மே 15ந் தேதி படம் வெளிவருகிறது. தப்பாட்ட கலையின் பெருமையை விளக்கும் இந்தப் படம் வெளியிடும் தியேட்டர்களில் வசூலாகும் பணத்தில் தயாரிப்பு தரப்புக்கு வரும் வசூல் தொகை அனைத்தும் விவசாயிகளின் நலனுக்கு வழங்கப்படும் என்ற தயாரிப்பாளர் ஆதம் பாவா அறிவித்துள்ளார்.