ஏப்., 30 முதல் ஒலிக்க தயாராகும் கமலின் மையம் விசில் ஆப் | தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் |
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்த பெயர் சுந்தர ராயர். ஜோக்கர் படத்தில் பாடியதற்காக சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எளிய பாடகரான சுந்தர ராயர் தேசிய விருது கிடைத்திருப்பது பற்றி கூறியதாவது:
ஜோக்கர் படத்தின் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கும், இயக்குநர் ராஜுமுருகன் அவர்களுக்கும், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களுக்கும் முதலில் எனது மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கிறேன். மேலும் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இசையமைப்பாளர் சான் ரோல்டனுக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு ஜோக்கர் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். இந்திய சினிமா இத்திரைப்படத்தை முக்கிய படமாக கருதி நமது தேசிய குழு விருதிற்காக பரிந்துரைத்ததற்கு மிக்க நன்றி. என்னுடைய பாடலை சிறந்த பாடலாக அங்கீகரித்ததற்கு தேர்வு குழுவிற்கு எனது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துத்கொள்கிறேன்.
நான் பெங்களூருக்கு அண்ணன் "மணல் மகுடி" நாடக குழுவுடன் நாடகம் போடுவதற்காக ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது எனக்கு போன் செய்தார்கள். நான் திரையில் பாடிய முதற்பாடலுக்கே தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை. என்னை போன்ற விவசாய குடும்பத்திலிருந்து வந்த சாமானியருக்கு தேசிய விருது கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. என்னை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளருக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்கிறார் சுந்தர ராயர்.