பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தில் நாயகியாக நடித்து வருபவர் காஜல்அகர்வால். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட் டில் நடைபெற்றபோது அஜீத்துடன் இணைந்து நடித்து வந்தார் காஜல். அப்போது படப்பிடிப்பு நடைபெற்ற சில முக்கியமான போட்டோக்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் அந்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாக பரவியது.
ஆனால் இந்த சேதி டைரக்டர் சிவாவின் கவனத்துக்கு சென்றபோது காஜல்அகர்வாலிடம் கோபத்தை காட்டியவர், இனிமேல் படம் குறித்த எந்தவொரு விசயத்தையும் வெளியிடக்கூடாது என்று தடை போட்டிருந்தாராம். அதையடுத்து இப்போது வரை விவேகம் படம் குறித்து எந்தவொரு விசயத்தையும் வெளியிடுவதில்லை காஜல்அகர்வால்.
இந்தநிலையில், தற்போது விஜய்யின் 61-வது படத்தில் நடித்து வரும் அவரிடம், நீங்கள் எந்தமாதிரியான ரோலில் நடிக்கிறீர்கள்? என்று எதேச்சையாக கேட்டால்கூட வாய் திறக்க மறுக்கிறார் காஜல். விஜய் படத்தில் நடிக்கிறேன் அவ்வளவுதான். நான் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறேன் என்பதை படம் வெளியாகும்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு நழுவி ஓடுகிறாராம் காஜல்அகர்வால்.