இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரகுல் பிரீத் சிங். தமிழை விட தெலுங்கில் தான் நம்பர்-1 நாயகியாக வலம் வருகிறார். தற்போது நாகசைதன்யாவுக்கு ஜோடியாக 'ராராண்டோய் வெடுக்க சூடம்' என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். இந்தப்படத்தில் தனது கேரக்டர் பற்றி கூறியுள்ள ரகுல் பிரீத் சிங், “மற்ற படங்களைப்போல வெறும் கதாநாயகியாக வந்தோம், போனோம் என்றில்லாமல் இந்தப்படத்தில் எனது கேரக்டரை மையப்படுத்தியே கதை பின்னப்பட்டுள்ளது. நாயகன் நாகசைதன்யாவுக்கு இணையாக எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இத்தனை நாட்களில் நான் நடித்த படங்களில் இதுபோன்ற ஒரு கேரக்டர் எனக்கு கிடைக்கவே இல்லை” என கூறியுள்ளார்.