சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தை தொடர்ந்து, புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் கதாநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். கேத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கும் படத்தில் அமலாபாலுடன் நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'பொன் ஒன்று கண்டேன்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார் விஷ்ணு விஷால்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்லா இயக்க, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா கெசண்ட்ரா நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஓவியாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு கௌரவ வேடம் என்று தகவல்.
'வி.வி.ஸ்டுடியோஸ்' பேனரில் விஷ்ணு விஷாலே தயாரிக்கும் இப்படத்துக்கு தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளைச் சுற்றி நடைபெற்று வருகிறது.