மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சுல்தான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛டியூப்லைட்'. கபீர்கான் இயக்கியுள்ளார். சல்மான் உடன் சீனாவை சேர்ந்த ஜூ ஜூ என்ற நடிகையும் நடித்திருக்கிறார். இப்படம் இந்தியா - சீனா போர்க்கள பின்னணியில் உருவாகியுள்ளது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் டியூப்லைட் உருவாகியுள்ளது. தற்போது படத்தின் வியாபாரம் மும்முரமாய் நடந்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் இந்திய உரிமையை சுமார் ரூ.132 கோடி கொடுத்து என்எச்., ஸ்டுடியோஸ் வாங்கியிருக்கிறது. தற்போது ஒரு சீன பட நிறுவனமும் டியூப்லைட் படத்தை ரூ.75 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. இதன்மூலம் சல்மான் படம் இந்தியா - சீனாவில் மட்டும் ரூ.200 கோடி வியாபாரமாகியுள்ளது. ஆக படம் ரிலீஸ்க்கு முன்பே ரூ.100 கோடி லாபம் பார்த்துவிட்டது. இதனால் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமாகியுள்ளனர்.