ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை போன்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் பலூன். காரணம் தற்போது தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிற ஜெய்யும், அஞ்சலியும் இணைந்து நடித்திருக்கும் படம். கூடுதலாக ஜனனி அய்யரும் நடிக்கிறார். சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன் தயாரிக்கும் இந்தப் படத்தை சினிஷ் என்ற புதுமுகம் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.
பலூன் இரண்டு காலகட்டங்களில் நடக்கிற கதை. படத்தில் 15 நிமிடம் பழைய கால கட்ட கதை சொல்லப்படுகிறது. இதில் ஜெய் பலூன் வியாபாரியாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஜனனி அய்யர் நடித்திருக்கிறார். நிகழ்கால கதையில் ஜெய் ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.
இது ஒரு திகில் கதை. பிளாஷ்பேக் கதையையும், இப்போதைய கதையையும் இணைப்பது ஒரு பலூன் தான். எனவே பலூன், படத்தின் குறியீடாக கடைசி வரை வரும். யோகிபாபு பெரும்பாலான காட்சிகளில் ஜெய்யுடன் வருகிறார். காமெடியானாக மட்டுமல்லாமல் குணசித்திர கேரக்டராகவும் நடித்திருக்கிறார். மே மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.