'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மாடல் உலகில் புகழ் பெற்றவர் பலாக் லால்வாணி. மும்பையை சேர்ந்த இவர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர் நடித்த முதல் படமான அப்பாயித்தோ அம்மாயி படத்தில் ஹீரோவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை தமிழுக்கு அழைத்து வருகிறார் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர். அவர் இயக்குனராக அறிமுகமாகும் குப்பத்து ராஜா படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பலாக்கை நடிக்க வைக்கிறார். இன்னொரு ஹீரோயினாக பூனம் பாஜ்வா நடிக்கிறார்.
இது சென்னை குப்பத்தில் வாழும் மனிதர்களை பற்றிய படம். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் குப்பத்து இளைஞராகவும், பலாக் பணக்கார வீட்டு பெண்ணாகவும் நடிக்கிறார். பார்த்திபன் வில்லனாக நடிக்கிறார். இதன் படிப்பிடிப்புகள் தொடங்கி சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் நடந்து வருகிறது.