இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மாநகரம் படத்தின் வெற்றிப் பூரிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லையாம், அந்த படத்தின் ஹீரோயின் ரெஜினாவுக்கு. 'ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தி விட்டார்களே என்ற சோகத்தில் இருந்த என்னை, மாநகரம் படம், கரை சேர்த்துவிட்டது. இப்படிப்பட்ட ஒரு வெற்றிக்காகத் தானே காத்திருந்தேன்' என, கண்கள் படபடக்க கூறுகிறார் ரெஜினா. அடுத்ததாக, உதயநிதியுடன் நடித்த சரவணன் இருக்க பயமேன் படம் வெளியாகவுள்ளதால், அந்த படத்தின் வெற்றிச் செய்தியும், தன் காதில் தேனாக பாயும் என்கிறார், அவர். வழக்கமாக, உதயநிதி படங்களுக்கு ஹாரீஷ் ஜெயராஜ் தான், இசையமைப்பார். ஆனால், இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஹிட்டாகி விட்டதால், சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.