ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்திற்கு ‛ஸ்பைடர்' என்று பெயர் வைத்துள்ளார்கள். கத்தி படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அகிரா படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் இயக்கி வருகிறார். கடந்த வருடம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஆனால் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமலே இருந்தது. இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் கோபமடைந்தனர். இயக்குனர் முருகதாஸ் மீது காட்டமாக இருந்தனர். இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என நேற்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில், படத்திற்கு ‛ஸ்பைடர்' என்று பெயரிட்டுள்ளனர். ஸ்பைடர் என்றால் ஸ்பைடர்மேன் அல்ல, உளவாளியை மையப்படுத்தி ‛ஸ்பை'(டர்) என்று பெயரிட்டுள்ளனர். மகேஷ்பாபு கையில் துப்பாக்கியுடன் ஒருபக்கமாக திரும்பி போஸ் தருகிறார். தற்போது இது டிரெண்ட்டாகி வருகிறது.