Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆஷா சரத் வயதை கணக்கிட மறந்த மேஜர் ரவி..!

12 ஏப், 2017 - 15:28 IST
எழுத்தின் அளவு:
mohanlal-and-asha-sarath-were-paired-up-in--the-movie-1971

கடந்த வாரம் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் மோகன்லால் நடிக்க, தந்தைக்கு ஜோடியாக ஆஷா சரத் நடித்திருந்தார். 1971ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் நிகழ்ந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருக்கிறது.. இந்தப்படம் பார்த்த பலரும் ஆஷா சரத்தை அவரது வயதுக்கேற்ற மேக்கப்பில் காட்டாமல்' மேஜர் ரவி எப்படி கவனக்குறைவாக இருந்தார் என்றுதான் பேசிக்கொள்கிறார்கள்.


கதைப்படி 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்கிறார் மேஜர் சகாதேவன் (மோகன்லால்). அப்போது அவருக்கு ஒரு மனைவி (ஆஷா சரத்) மற்றும் எட்டு வயதில் ஒரு ஒரு மகன் இருக்கிறார்கள். அப்போது மோகன்லாலுக்கு வயது 30 என்றும் ஆஷா சரத்துக்கு 25 என்றும் அவர்களது தோற்றத்தை வைத்து கணக்கிட்டு கொள்ளலாம். ஆனால் இந்த கதையை வயதான மேஜர் சகாதேவன் தனது பிளாஸ்பேக் கதையாக இப்போது சொல்வதுபோலத்தான் படம் நகர்கிறது..


அதன்படி 46 வருடங்கள் கழித்து இப்போது மோகன்லாலுக்கு வயது 76 ஆகியிருக்கும்.. அதற்கேற்றவாறு மேக்கப்பில் நரைத்த, முன் நெற்றியில் வழுக்கை விழுந்தது போல மோகன்லாலை வயதானவராகவும் காட்டியிருப்பது சரிதான்.. ஆனால் அவரது மனைவியாக வரும் ஆஷா சரத்துக்கும் 70 வயதுக்குமேல் ஆகியிருக்க வேண்டும் இல்லையா..? ஆனால் 76 வயதான மோகன்லாலுடன் வரும் காட்சிகளில் கிட்டத்தட்ட 45 வயது பெண்மணி போலத்தான் காட்சியளிக்கிறார் ஆஷா சரத். அவருக்கு மட்டும் வயது கூடமால் போனது எப்படி என்பதுதான் புரியவில்லை.


இன்னொரு விஷயம் 1971ல் எட்டு வயதில் இருந்த ஜூனியர் மோகன்லால் இப்போது மேஜர் மகாதேவன்.. கிட்டத்தட்ட இவர் வயதும் 54 தானே இருக்கவேண்டும்.. ஆனால் ஆரம்ப காட்சிகளில் வரும் இவர் 35 வயதுக்குட்பட்ட இளமையான தோற்றத்துடன் காட்சி தருவது எப்படி என்பதற்கும் மேஜர் ரவி தான் விளக்கம் சொல்லவேண்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in