‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தொண்டன் படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி தற்போது ஏமாலி என்ற படத்தில் நடிக்கிறார். லதா புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுக ஹீரோவும் நடிக்கிறார். கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். அஜித் நடித்த முகவரி, விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்பு நடித்த தொட்டி ஜெயா, பரத் நடித்த நேபாளி போன்ற படங்களை இயக்கியவர் இவர்.
வி.இசட். துரை இயக்கும் ஏமாலி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஜெயமோகன் வசனம் எழுதும் இந்த படத்தின் ஒளிப்பதிவை எம்.ரத்திஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனிக்கின்றனர். சாம்டி.ராஜ் இசை அமைக்கிறார். ஏமாலி என்று தலைப்பு தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஏமாலி என்பது தவறான வார்த்தை. ஏமாளி என்பதே சரியான வார்த்தை.
பலரும் இதை கண்டுகொள்ளாத நிலையில், ஒரு பத்திரிகையாளர்கள் இந்த தவறை சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார். அதோடு இயக்குநர் வி.இசட்.துரைக்கும் மெஸேஜ் அனுப்பினார். அதற்கு, தெரிந்தேதான் ஏமாலி என்று டைட்டில் வைத்துள்ளேன். படத்தில் இதற்கான காரணம் இருக்கிறது என்று பதில் அனுப்பியுள்ளார் வி.இசட்.துரை.