ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் இலை. லீஃப் புரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை பினீஷ் ராஜ் இயக்கி உள்ளார். ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதில் ஸ்வாதி நாராயணன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் தவிர சுஜீத், கன்னட நடிகர் கிங்மோகன், ஸ்ரீதேவி, சோனியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு வி.திவாகரன் இசை அமைத்துள்ளார். படத்தை பாராட்டிய தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பினீஷ்ராஜ் கூறியதாவது:
இது வெறும் கருத்து சொல்லும் படமல்ல. இக்கதையில் வணிக சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இது ஒரு தரமான படம். பெண் கல்வி பற்றி நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் படம். வணிக ரீதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் இல்லை. எந்த வாக்குவாதமும் எழவில்லை. தணிக்கை செய்ய எங்களுக்கு மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இது மாதிரி அனுபவம். எப்போதாவது தான் கிடைக்கும் என்று பாராட்டி யு சான்றிதழ் கொடுத்தார்கள். வருகிற ஏப்ரல் 21ந் தேதி படம் வெளிவருகிறது. என்றார் பினீஷ் ராஜ்.