இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
உள்ள படம் ஓ காதலனே. இதுவரை தயாரிப்பு நிர்வாகியாக இருந்த எஸ்.அப்துல் சத்தார், தனது அல்லா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படம். எம்.கவுசர் என்ற புதுமுகம் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். ஹாசன், வர்ஷா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர டெல்லி கணேஷ், விஜய் கணேஷ், கோபி, லட்சுமிஸ்ரீ, பானு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெய் நடேஷ் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் எம்.கவுசர் கூறியதாவது:
எம்.ஜி.ஆரின் 'விவசாயி' படத்தில் உடுமலை நாராயண கவி எழுதிய பாட்டு "நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்..." என்பது. அதில் "கன்னியருக்கும் காளையருக்கு கட்டுப்பாட்டை விதைத்து கற்பு நிலை தவறாத காதல் பயிர் வளர்த்து..." என்று ஆணுக்கும், பெண்ணுக்கும் கற்பு முக்கியம் என்று வலியுறுத்தியிருப்பார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதுதான் கதையின் கரு. காதலிக்கும்போதும் சரி கல்யாணத்துக்கு பிறகும் சரி. ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு முக்கியம் என்பதை வலியுறுத்தும் படம். கோவாவில் பாடல்களும், வேலூரியில் கதையும் படமாகி உள்ளது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து டப்பிங், இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. என்கிறார் இயக்குனர் எம்.கவுசர்.