இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில், சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக உருவாகி இருக்கும் படம் ‛சர்கார் 3'. இந்தப்படத்திலும் அமிதாப் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், மனோஜ் பாஜ்பாய், ரோனித் ராய், அமித் சாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சர்கார் 3 படத்தை அலும்பரா என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் வேவ் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் அமிதாப் பச்சனுக்காக கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதைப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது "நடிகர் அமிதாப் பச்சன், இயக்குநர் ராம் கோபால் வர்மாவை அழைத்து நீண்ட நேரம் பேசியதாகவும், தனக்கான காட்சிகளை கூடுதலாக சேர்க்கும்படி கேட்டதாகவும், அதன்பின் ராம்கோபால், சர்கார்-3 படத்தில் அமிதாப்பிற்கு மட்டும் கூடுதல் காட்சிகளை ரகசியமாக படமாக்கி இணைத்ததாகவும் கூறப்படுகிறது''.
சர்கார் 3 படம், வருகிற மே மாதம் 12ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.