ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபுதேவா நடித்த மூன்று மொழிப்படமான தேவி படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் தற்போது வனமகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஷாயிஷா நாயகியாக நடித்திருக்கிறார். அகில் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர், அதையடுத்து தனது தாய்மொழியான இந்தியில் ஷிவாய் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மூன்றாவதாக தமிழுக்கு வந்துள்ள ஷாயிஷா, இதற்கடுத்து பிரபுதேவா தயாரித்து இயக்கும், கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
மேலும், வனமகன் படத்தில் ஷாயிஷா நடித்திருப்பது பற்றி அப்பட இயக்குனரான ஏ.எல்.விஜய் கூறும்போது, வனமகன் கதையை கேட்டபோது ரொம்பவே இம்பரசாகி விட்டார் ஷாயிஷா. அதனால் தனக்கான டயலாக் பேப்பரை ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கிச்சென்ற அவர், அனைத்தையும் மனப்பாடம் செய்து வந்து நடித்தார். அதன்காரணமாக க்ளோசப் காட்சிகளில் லிப் மூவ்மெண்ட் கரெக்டாக இருந்தது. அது டப்பிங் பேசுவதற்கு எளிதாக இருந்தது. மேலும், நடனத்தில் வல்லவர் ஷாயிஷா. ஜெயம்ரவியுடன் இணைந்த அவர் நடனமாடி யுள்ள ஒரு பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்கிறார்.