அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மஞ்சப்பை ராகவன் இயக்கியுள்ள படம் கடம்பன். பழங்குடியின மக்களின் வாழ்வாதார பிரச்சினையை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கேத்ரின் தெரசா, ஒய்.ஜி.மகேந்திரன், சூப்பர் சுப்பராயன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாங்காங் நாட்டு காடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த கடம்பன் படத்தில் 70-க்கும் மேற்பட்ட பாங்காங் நாட்டு யானைகள் நடித்துள்ளன. இப்படம் ஏப்ரல் 14-ந்தேதி திரைக்கு வருகிறது.
கடம்பன் படம் குறித்து இயக்குனர் ராகவன் கூறுகையில், கடம்பன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழில் கடம்பன் என்ற பெயரில் வெளியாகும் இப்படம் தெலுங்கில் கஜேந்திரடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. மேலும், கடம்பன் என்றால் முருகன், கஜேந்திரடு என்றால் விநாயகர். ஆக, தமிழில் தம்பியாகவும், தெலுங்கில் அண்ணனாகவும் அவதாரம் எடுக்கிறார் ஆர்யா என்கிறார் ராகவன்.