Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானும், கார்த்தியும் நடிகர் சங்க கட்டிடத்திற்காக பணம் சேர்க்கிறோம்! -விஷால் பேச்சு

11 ஏப், 2017 - 09:32 IST
எழுத்தின் அளவு:
myself-and-karthik-are-collecting-money-for-nadigar-sangam-building-says-vishal

பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஐந்தாவது படம் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா. விஷால்-கார்த்தி நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஷாயிஷா நாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் கதை எழுதியுள்ளார். சுபா திரைக்கதை வசனம் எழுதுகிறார்கள்.


இந்த படத்தின் தொடக்க விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.அப்போது பிரபுதேவா, விஷால், கார்த்தி, டைரக்டர் ஏ.எல்.விஜய், ஷாயிஷா, தயாரிப்பாளர் கே.கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அப்போது பிரபுதேவா பேசுகையில், இந்த படத்திற்கான கதையை மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் எழுதியுள்ளார். நான் நடித்த நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பிலே போன்ற படங்களை அவர்தான் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கான கதையை சொல்லும்போது எப்படி வேண்டுமோ அப்படி மாற்றி பண்ணிக்கோ. படம் பண்றது வரைக்கும் நான் இருப்பேனோ மாட்டேனோ என்று சொல்வார்.


அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார் என்பேன். இந்த படம் நடக்க முக்கிய காரணம் கே.சுபாஷ் சார்தான். ஏன்னா இரண்டு ஹீரோ கதை என்கிறபோது அவர்களை சம்மதிக்க வைக்கிறதே பெரிய விசயம். அதே மாதிரி விஷாலும், கார்த்தியும் ஒத்துக்கொண்டதால்தான் இந்த கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படம் தொடங்கப்போகிறது. இந்த படம் அகிம்சா, வன்முறைக்கிடையே நடக்கும் கதையில் உருவாகிறது. இப்படத்தில் இரண்டு ஹீரோ என்றாலும், ஒரே ஹீரோயினியாக ஷாயிஷா நடிக்கிறார் என்றார்.


விஷால் பேசும்போது, ஷாயிஷா ஆடிய ஒரு நடனத்தைப்பார்த்து நானும், கார்த்தியும் பயந்து போயிருக்கிறோம். பிரபுதேவா மாஸ்டர் ஆவி அவரது உடம்புக்குள் போய் அவர் ஆடியது போல் இருந்தது. சிம்ரன் சிறப்பாக நடனமாடியதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஷாயிஷாவும் சிறப்பாக நடனமாடியிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசையில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன்.


இப்போது மீண்டும் நடிக்கப்போகிறோம். நானும், கார்த்தியும் நடிகர் சங்க கட்டிடத்திற்காக பணம் கொடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தில் இருந்து அதற்கான பணத்தை சேர்க்கப்போகிறோம். இந்த டைட்டீல் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா ரொம்ப சரியாக உள்ளது. வெடி படத்திற்கு பிறகு மீண்டும் பிரபுதேவா மாஸ்டர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.


கார்த்தி பேசும்போது, இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பதென்றால் எவ்வளவு பெரிய குழப்பம் வரும் என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த இரண்டு ஹீரோக்கள் நெருக்கமான நண்பர்களாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் நடக் கும். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு நானும், விஷாலும் பேசிக்கொண்டதுகூட கிடையாது. அதன்பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய விசயங்கள் பேசியிருக்கிறோம்.


நீ பெருசா நான் பெருசா என்கிற விசயம் கிடையாது. எல்லா இடத்திலேயும் விஷால் என்னைப்பற்றியே பேசி வருகிறார். அவரைப் பற்றி பேசுவதே இல்லை. சினிமா நல்லாயிருக்கனும் என்பதற்காக 24 மணி நேரமும் உழைக்கிறார் விஷால். இதுக்காக அவருக்கு யாரும் அவார்டு கொடுக்கப் போறது கிடையாது. பொதுநலம் செய்வதற்காக இறங்கி வேலை செய்கிறோம்.


நிறைய தடவை அண்ணனையும், என்னையும் சேர்ந்து படம் பண்ண கேட்பார்கள். அதுக்கான கதை அமையாமல் இருந்தது. இந்த படத்தில் இரண்டு ஹீரோ கதை என்றதும் முதலில் எனக்கு பயமாக இருந்தது. பின்னர் கதை கேட்டோம், இரண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் இந்த கதை நன்றாக இருந்தது.


இதை பண்ணிடலாமா என்று பேசிக்கொண்டிருந்தபோது பிரபுதேவா மாஸ்டர் இயக்குவதாக முடிவானதும், ரொம்ப நாளைக்குப்பிறகு படம் இயக்குகிறார். நம்மையும் நன்றாக ஆட வைத்து விடுவார் என்று ஓகே சொன்னேன். சுபாஷ் சார் இறந்து விட்டார். என்றாலும் அவர் ஞாபகார்த்தமாக இந்த படம் பண்ணிடனும் என நினைத்தோம். விஷாலுடன் நடிக்கப்போவது நல்ல அனுபவமாக அமையப் போகிறது. எங்களுக்கிடையே நட்பு எப்போதும் இருக்கும் என்றார்.


Advertisement
கஞ்சாகருப்புவுக்கு டைரக்டர் பாலா கொடுத்த அட்வைஸ்!கஞ்சாகருப்புவுக்கு டைரக்டர் பாலா ... சுனைனாவை ஆச்சர்யப்படுத்திய தொண்டன் நாயகி அர்த்தனா! சுனைனாவை ஆச்சர்யப்படுத்திய தொண்டன் ...


வாசகர் கருத்து (4)

Bond007 - London,யுனைடெட் கிங்டம்
12 ஏப், 2017 - 17:49 Report Abuse
Bond007 தான் சார்ந்த தொழில்துறை நல்ல படியாக இருக்கணும்னு விஷால் கார்த்திக்கு இருக்குற அக்கரைல 1 சதவீதம் கூட இந்த விஜய் அஜீத் கிடையாது.
Rate this:
csk - chennai  ( Posted via: Dinamalar Windows App )
11 ஏப், 2017 - 14:43 Report Abuse
csk Can you reduce theatre ticket rates and canteen eatable rates though they are selling on unenthical price..can you take action on this?
Rate this:
TechT - Bangalore,இந்தியா
11 ஏப், 2017 - 11:56 Report Abuse
TechT எல்லோரும் இறங்கி வேலை செய்கிறோம்னு சொல்லுறீங்களே கிணறு நோண்டுறீங்களாப்பா, நீங்க சம்பாரிக்கறத பல மடங்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கிறீர்கள் வேற என்ன?.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in