ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலா, அமீர் இயக்கிய படங்களில் காமெடியான நடித்து பிரபலமானவர் கஞ்சாகருப்பு. அந்த நன்றிக்கடனாக தனது வீட்டிற்கு பாலா-அமீர் இல்லம் என்று பெயர் வைத்துள்ளார் கஞ்சா கருப்பு. மேலும், தனது காமெடி பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று கதையின் நாயகனாக நடிக்கும் ஆசை ஏற்பட, வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. இதனால் கடன்காரராகி விட்டார் கஞ்சாகருப்பு. அதோடு அவரது காமெடி மார்க்கெட்டும் ஆட்டம் கண்டது.
இருப்பினும், மறுபடியும் அவர் காமெடியனாக சில படங்களில் நடித்துக்கொண்டி ருக்கிறார். சமுத்திரகனியின் தொண்டனில் காமெடி கலந்த குணசித்ர வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், தொண்டன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய டைரக்டர் பாலா, கஞ்சா கருப்புவுக்கு தனது பாணியில் அட்வைஸ் கொடுத்தார். ஒழுங்கா நடிச்சிக்கிட்டு இருந்தே. படம் தயாரிக்க போறேன்னு போனே. என்னாச்சு படமும் ஓடல, பணமும் போச்சு. இப்ப மறுபடியும் இட்லி கடைய வச்சிட்டே. இனிமேலாவது கிடைக்கிற சான்ச பயன்படுத்தி பொழைச் சுக்க என்றார் பாலா.