மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள். அச்சம் என்பது மடமையடா படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடங்கினார் கௌதம் மேனன்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது சில பிரச்னைகளால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனே விக்ரம் நடிப்பில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்தில் கவனம் செலுத்த துவங்கினார் கௌதம் மேனன். இந்நிலையில் தற்போது அப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. ப.பாண்டி படத்தை வாங்கியுள்ள கே பிலிம்ஸ் ராஜராஜன், இந்தப்படத்தின் உரிமையையும் வாங்கியுள்ளார். ஆகையால், விரைவில் தனுஷுக்கு அளிக்க வேண்டிய பணத்தை கொடுத்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள்.
எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை முடித்து ஜூன் 23ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதே தேதியில் தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படமும் வெளியாகவுள்ளது.