பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாகுபலி படத்தைப் போல் ஒரு படம் தயாரிக்க வேண்டும் ஆசைப்பட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், சுந்தர்.சி இயக்கத்தில் அதை செயல்படுத்த தீர்மானித்தது. சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட உள்ள அந்தப் படத்துக்கு சங்கமித்ரா என்று பெயரிடப்பட்டது.
விஜய், சூர்யா, மகேஷ்பாபு என முன்னணி ஹீரோக்களை அணுகினார்கள். ஒரு வருடம் கால்ஷீட் கேட்டதால் விஜய், சூர்யா நடிக்க மறுத்துவிட்டதால், கடைசியில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருக்கும் குதிரை ஒட்டும் பயிற்சி, வாள் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சங்கமித்ரா படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வரும்நிலையில் இந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக படத்துறையில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. அதை பொய்யாக்கும் வகையில் சங்கமித்ரா படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக இந்தி திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான சுதீப் சட்டர்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் பத்மாவதி படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருவதால், சங்கமித்ரா படத்திலிருந்து விலகினார். இதனால் வேறுசில முன்னணி ஒளிப்பதிவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சுந்தர்.சி, தற்போது 24 படத்துக்காக தேசிய விருது வென்ற திரு-வை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள இந்தப்படத்தின் கலை இயக்குநராக சாபுசிரில் பணியாற்ற இருக்கிறார். பாகுபலியை மிஞ்சுகிற வகையில், இந்திய அளவில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது.