ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ராஜா ராணி', 'காக்கா முட்டை', 'எங்கேயும் எப்போதும்', 'குக்கூ' 'முண்டாசுப்பட்டி' என ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள்தான். குக்கூ கமர்ஷியலாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் பாராட்டு பெற்றது. அதன் காரணமாகவோ என்னவோ பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தொடர்ந்து தமிழ்ப்படத்துறையிலிருந்து ஒதுங்கி நின்றது.
பிறகு ஒவ்வொரு படங்களாக தொடங்கி தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களை தயாரித்து வருகிறது. ஏ.ஆர் முருகதாஸ், வெற்றிமாறன், அட்லி போன்ற பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் மீண்டும் கை கோர்த்து இருப்பது மட்டுமின்றி நடிகர் விஷ்ணுவுடனும் தற்போது இணைந்துள்ளது.
இந்த ஆண்டில் (2017) வருகிற மூன்று மாதங்களில் இந்த நான்கு படங்களையும் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியிட இருக்கிறது. அதில் ஒரு படம் அட்லி இணை தயாரிப்பில் திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வரும் சங்கிலி புங்கிலி கதவ தொற. இந்த படத்தை மே 19-ஆம் தேதி அன்று வெளியிடுகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ரங்கூன் படத்தை ஜூன் 9-ஆம் தேதி அன்றும், தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் தயாரிப்பில், அரசியல் பிண்ணனியில் உருவாகி இருக்கும் அண்ணனுக்கு ஜெய் படத்தை ஜூலை 7 ஆம் தேதி அன்றும் வெளியிடுகின்றனர். இந்த படங்கள் தவிர விஷ்ணு விஷால் நடிப்பில் ஜூன் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நகைச்சுவை படமான கதாநாயகன் படத்தையும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது.