மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பெங்காலி மொழியில் வெளியான படம் ‛ராஜ்காகினி'. இப்படம் தற்போது பாலிவுட்டில் ‛பேகம் ஜான்' என்ற பெயரில் ரீ-மேக்காகியுள்ளது. பேகம் ஜானாக வித்யாபாலன் நடித்திருக்கிறார். அவருடன் நஸ்ருதின் ஷா, ஆஷிஷ் வித்யார்தி, இலா அருண், கவுகர் கான், சன்கி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலியல் தொழில் செய்யும் பெண்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நிறைய ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறி நிறைய காட்சிகளை தணிக்கை துறையினர் வெட்டி எறிந்தனர். தற்போது படம் ரிலீஸ் தேதியை நெருங்கிவிட்டது. வருகிற ஏப்., 14-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் பேகம் ஜான் படத்திற்கு ஜார்கண்ட் மாநிலம் வரிவிலக்கு அளித்துள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸை வித்யாபாலன் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பிறகு ‛பேகம் ஜான்' படத்திற்கு வரிவிலக்கு அளித்தார் முதல்வர். இதனால் வித்யாபாலன், மகேஷ் பட் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து இன்னும் சில மாநிலங்களிலும் வரிவிலக்கு கிடைக்கும் என நம்புகிறார்கள்.