தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். இதற்கு முன்பு சரண் இயக்கத்தில் ஜெமினி படத்தில் நடித்தது போன்று ரவுடிசம் சம்பந்தப்பட்ட கதையில் நடித்து வருகிறார் விக்ரம். வடசென்னையை கதைக்களமாகக் கொண்ட இந்த படத்தில் தாதாவாக நடிக்கும் விக்ரம், தாடி வைத்து லுங்கி அணிந்து நடித்து வருகிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, இன்னொரு நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். தாதா விக்ரமை இவர்கள் இரண்டு பேருமே காதலிப்பார்களாம். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் படத்தின் தலைப்பு ஸ்கெட்ச் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இது ஆங்கில வார்த்தை என்பதால், போஸ்டர் வெளியிட வேண்டுமே என்பதற்காக ஏற்கனவே முடிவு பண்ணி வைத்திருந்த இந்த டைட்டீலை வெளியிட்டுள்ளனர். ஆனால் தற்போது வேறு டைட்டீல் யோசித்து வருகிறார்கள். அதனால் இந்த ஸ்கெட்ச் தலைப்பு தற்காலிக மானதுதான். படம் வேறு தலைப்பில்தான் திரைக்கு வரும் என்கிறார்கள்.