பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாளத்தில் சத்யன் அத்திக்காடு இயக்கத்தில் துல்கர்சல்மான் நாயகனாக நடித்த ஜாமுன்டே சுவிசேங்கள் படத்தில் அறிமுகமானார் காக்கா முட்டை ஐஸ் வர்யா ராஜேஷ். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து நிவின்பாலியுடன் சக்காவு -என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வருகிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் 65 வயது முதிர்ச்சியான கெட்டப்பில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேட்டபோது, துல்கர்சல்மானுடன் நடித்த முதல் மலையாள படமே எனக்கு திருப்புமுனையை கொடுத்தது. எனது நடிப் புக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்து விட்டனர். அதனால் நிவின்பாலியுடன் நடித் துள்ள சக்காவு படத்தில் இன்னும் வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறேன். முக்கியமாக மலையாள ரசிகர்கள் யதார்த்தமான நடிப்பை அதிகமாக ரசிப்பதால் அதை உணர்ந்து நடித்துள்ளேன்.
இந்த சக்காவு படத்தில் கதைப்படி, 65 வயதில் இருக்கும் ஒரு ஜோடி, தாங்கள் கடந்து வந்த இளமைக்காலங்களை அசைபோடும் வகையில் உருவாகியிருக்கிறது. அதனால் சில காட்சிகளில் நானும், நிவின்பாலியும் வயதான கெட்டப்பில் நடித்திருக்கிறோம். ஆனால் அது குறைவான நேரம்தான். மற்றபடி இளமைக்கால கெட்டப்பில்தான் படம் முழுக்க நடித்திருக்கிறோம். அந்த வகையில், முதன் முறையாக வயதான தோற்றத்தில் நடித்தது நல்லதொரு அனுபவமாக அமைந் தது. இந்த சக்காவு படம் மலையாள சினிமாவில் எனக்கு ஒரு நிலையான இடத்தை பிடித்துத்தரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.