விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
நடிகர் அமிர்கானின் அடுத்த படம் "சீக்ரட் சூப்பர்ஸ்டார்". இப்படத்தில் அமிர்கானுக்கு ஜோடியாக பாத்திமா ஜாகிரா வாசிம் நடிக்கிறார். இப்படத்தின் கதை தாய் - மகள் இடையேயான அன்பை சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய பாடகி ஆக வேண்டும் என்பது மகளின் கனவு. ஆனால் தந்தை இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தன் மகளின் கனவை நிறைவேற்ற, அவரின் தாய் எப்படி உதவுகிறார் என்பது தான் படத்தின் கதை. அத்வைத் சந்திரன் இப்படத்தை எழுதி, இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 4ம் தேதி ரிலீசாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டு, தீபாவளிக்கு ரிலீசாகும் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ரோபோ 2 படமும் தீபாவளிக்கு ரிலிசாக உள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிசில் தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களில் ரஜினி நடிப்பில் வெளிவரும் ரோபோ 2 படத்திற்கும், அமிர்கான் நடித்துள்ள சீக்ரட் சூப்பர்ஸ்டார் படத்திற்கும் மிகப் பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.