டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'பைரவா'. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகச் சொல்லப்பட்ட இந்தப் படம் அதன் பின் நஷ்டத்தைக் கொடுத்த படங்களின் பட்டியலிலும் இடம் பிடித்தது. இருந்தாலும் மோசமான தோல்வி எல்லாம் இல்லாமல் விஜய்யின் இமேஜை இந்தப் படம் தக்க வைத்துக் கொண்டது.
இந்தப் படத்தை தற்போது அதே பெயரிலேயே தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். 'துப்பாக்கி, தெறி' ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ஓரளவிற்கு வசூலைப் பெற்றன. மற்ற தமிழ் ஹீரோக்களின் டப்பிங் படங்கள் அளவிற்கு விஜய் படங்கள் இன்னும் தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.
சூர்யா, கார்த்தி ஆகியோர் படங்கள் அளவிற்குக் கூட விஜய், அஜித் நடித்து டப்பிங் ஆகும் படங்கள் வசூலைப் பெறுவதில்லை என்பதே உண்மை. விஜய், அஜித் இருவரும் இன்னும் தமிழ் ஹீரோக்களாகத்தான் உள்ளார்கள். விஜய் ஆண்டனி கூட தெலுங்கில் 'பிச்சைக்காரன்' படம் மூலம் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார்.
'பைரவா' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.