தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் 'சங்கமித்ரா'. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஜெயம் ரவியும், ஆர்யாவும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துக் கொடுத்த பின் இப்படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் இப்படத்திற்காக சண்டைப் பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்.
டிம்கிளோட்ஸ் என்ற வெளிநாட்டு சண்டைப் பயிற்சியாளரிடம் அவர் தன்னுடைய சண்டைப் பயிற்சியை இரண்டு நாட்களுக்கு முன்பு ஆரம்பித்துவிட்டார். இப்படத்தில் மிகவும் வலிமையான ஒரு கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளாராம். படத்தில் நாயகர்களுக்கு இணையாக அவருக்கும் சண்டைக் காட்சிகள் உள்ளதால்தான் ஸ்ருதி முறையான பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.
'சங்கமித்ரா' படம் ஒரு சரித்திரப் படமாக உருவாக உள்ளது. தமிழ்த் திரையுலகில் இதுவரை வெளிவராத அளவிற்கு இப்படத்தை உருவாக்கும் முயற்சியில் படக்குழுவினர் இறங்கியுள்ளார்கள். இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.