திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகை பிபாஷா பாசு. இவர் கடந்தாண்டு கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெண்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் வகையில் தற்காப்பு கலை பயில புதிய பயிற்சி மையம் தொடங்க இருக்கிறார் பிபாஷா. முதற்கட்டமாக டில்லி மற்றும் கோல்கட்டாவில் பயிற்சி மையம் அமைக்க இருக்கிறார். இதில் பெண்களுக்கான கிக்பாக்ஸிங் உள்ளிட்ட பல தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன. சுமார் 13 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் இந்த பயிற்சியில் ஈடுபடலாம். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்த இன்னும் நிறைய இடங்களில் பயிற்சி மையம் அமைக்க எண்ணியுள்ளார் பிபாஷா.