Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் அறிவிப்பு: விஷாலுக்கு தியேட்டர் அதிபர்கள், விவசாயிகள் கண்டனம்

08 ஏப், 2017 - 10:05 IST
எழுத்தின் அளவு:
Theatre-owners,-Farmers-oppose-to-Vishal-announcement-of-Rs.1-from-each-cinema-ticket

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான அணியினர் பொறுப்புக்கு வந்துள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் பேசிய விஷால் "விவசாயிகளுக்கு உதவும் வகையில் தியேட்டரில் விற்கப்படும் டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் வீதம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விவசாயிகள் நலனுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கோடி கணக்கில் பணம் கிடைக்கும்" என்று அறிவித்தார்.


விஷாலின் இந்த அறிவிப்புக்கு தியேட்டர் அதிபர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பி.கண்ணப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தியேட்டர் டிக்கெட்டில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று அறிவித்துள்ளார். எங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக எங்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி விவாதித்தோம்.


விஷாலுக்கும் தியேட்டருக்கும் சம்பந்தம் இல்லை. அவர் எங்கள் சங்கத்திலும் இல்லை. அப்படி இருக்கும்போது எங்கள் தொடர்புடைய ஒன்றை அவர் எப்படி அறிவித்தார் என்று தெரியவில்லை. படத்துக்கு போட்ட காசை தயாரிப்பாளரால் எடுக்க முடியவில்லை. ஏசிக்கும், பராமரிப்புக்குமான செலவை தியேட்டர்காரர்களால் எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது இது என்ன அறிவிப்பு என்று புரியவில்லை. விஷால் விவசாயிகளுக்கு தாராளமாக உதவட்டும். அதனை நாங்கள் வரவேற்கிறோம். நடிகர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை விவாசயிகளுக்கு கொடுத்தாலே கோடி கணக்கில் கிடைக்கும் அதை அவர்கள் செய்யட்டும்.


வருகிற 90 சதவிகித படங்களில் லாபமில்லை. இந்நிலையில் தம்பி விஷால் ஒன்றும் புரியாமல் இப்படிச் சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. அவருக்கு இது பற்றித் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. அவருக்கு அனுபவம் இல்லை. அப்படி என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். இப்படி எதுவும் புரியாமல் குழப்படி செய்யக் கூடாது. எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது. விஷாலின் திட்டத்திற்கு நாங்கள் துணை நிற்க மாட்டோம் என்கிறார் கண்ணப்பன்.


இதற்கிடையில் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் "திரையரங்குகளில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருப்பது விவசாயிகளின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் விடப்பட்டிருக்கும் சவால். நாங்கள் கேட்பது பிச்சை அல்ல. உரிமை" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Advertisement
அக்சய்குமாரை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்ட டைரக்டர் ஷங்கர்!அக்சய்குமாரை வாழ்த்தி போஸ்டர் ... பிளாஷ்பேக்: நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் பிளாஷ்பேக்: நல்லவனுக்கு நல்லவன் ...


வாசகர் கருத்து (7)

அபிமன்யு - chennai,இந்தியா
08 ஏப், 2017 - 17:24 Report Abuse
அபிமன்யு தயாரிப்பாளர் துட்டுல இவன் மஞ்சள் குளிக்க பார்க்கிறான் .. ஏன் இவன் சம்பளத்துல 20 % கொடுக்க வேண்டியதுதானே ...
Rate this:
08 ஏப், 2017 - 13:21 Report Abuse
PrasannaKrishnan supertamilza
Rate this:
08 ஏப், 2017 - 13:21 Report Abuse
PrasannaKrishnan supertamilza
Rate this:
08 ஏப், 2017 - 13:21 Report Abuse
PrasannaKrishnan supertamilza
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
08 ஏப், 2017 - 13:06 Report Abuse
Vaal Payyan நல்லது பண்ணனும்னா சத்தமில்லாம பண்ணு காசு போட்டு பம்ப் செட் வச்சி குடு. ஆறு படுக்கையை தூர் வார உதவி செய், விவசாய பொருட்களை விற்க உதவி செய். உன் செல்வாக்கை பயன்படுத்தி கிராம பஞ்சாயத்திற்கு பொருள் உதவி செய். இதை எல்லாம் விட்டு விட்டு ஊரான் வீட்டு தேங்காயை எடுத்து ஓசியில ஒடச்சி சட்னி வைக்காதே. பாப்புலாரிட்டி ஒண்ணே இவனுங்க குறிக்கோள். தமிழன் சினிமா பார்க்கலாம், ஆனா சினிமாகாரனை பாக்க கூடாது. ஜாக்கிரதை தமிழா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
  Tamil New Film Oru Kathai Sollatuma
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in