ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களில் அதிகப்படியான பட்ஜெட்டில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் 2.ஓ. எந்திரன் படத்தின் இரண்டாம்பாகமான இந்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்க, பாலிவுட் நாயகன் அக்சய்குமார் வில்லனாக நடித்துள்ளார். அவரது வில்லன் வேடத்தை நார்மலாக இல்லாமல் பல கெட்டப்புகளில் வெளிப்படுத்தும் ஷங்கர், அவரது சில அதிரடியான போஸ்டர்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், ருஸ்டம் இந்தி படத்தில் நடித்தமைக்காக அக்சய்குமாருக்கு தேசிய விருது கிடைத்திருப்பதால், தனது டுவிட்டரில் அவருக்கு இதயப்பூர்வான வாழ்த்தினை தெரிவித்துள்ளார் டைரக்டர் ஷங்கர். அதோடு, 2.ஓ படத்தில் அக்சய்குமாரின் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.