தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இருமுகன் படத்தை அடுத்து விக்ரம், ‛வாலு விஜயசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். கூடவே மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீப்ரியங்காவும் நடிக்கிறார். இந்தப்படம் வடசென்னை கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமலே படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பை படக்குழு வௌியிட்டுள்ளனர். அதன்படி, படத்திற்கு 'ஸ்கெட்ச்' என்று பெயர் வைத்துள்ளார்கள். கூலிங்க் கிளாஸ் அணிந்து தாடியுடன் ஸ்டைலாக விக்ரம் இருக்கிறார். பொதுவாக தாதாக்கள் ஒருவரை தூக்க வேண்டும் என்றால் ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவோம் என்று சொல்வார்கள். அப்படி பார்க்கையில் படத்திற்கு ஸ்கெட்ச் என்று பெயர் வைத்திருக்கிறார்கள், ஆக படத்தில் விக்ரம் ஒரு தாதாவாக நடிப்பார் என தெரிகிறது.