Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிய விருது, கருத்து சுதந்திரத்திற்கான அங்கீகாரம்: ஜோக்கர் ராஜூ முருகன்

07 ஏப்,2017 - 17:32 IST
எழுத்தின் அளவு:

ஜோக்கர் படத்திற்கு விருது கிடைத்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கான ஒரு அங்கீகாரம் தான் என இயக்குநர் ராஜூ முருகன் கூறியுள்ளார். பத்திரிகையாளராக இருந்த ராஜூ முருகன் குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்துடன் களமிறங்கிய ராஜூ முருகன், இரண்டாவதாக ‛ஜோக்கர்' என்ற படத்தை இயக்கினார். குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்தார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை பற்றி பேசிய இப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல இப்படத்தில் பாடிய சுந்தருக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.


தேசிய விருது கிடைத்தது குறித்து பத்திரிகையாளர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்ட ஜோக்கர் படக்குழுவினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜூ முருகன்... ‛‛மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக நான் விருதுகளை குறி வைத்து கதை எழுதுவது கிடையாது. ஜோக்கர் மாதிரி கதையை எழுதும்போது அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே பெரிய விருது என்று தான் எண்ணினேன். அதை எனது தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மற்றும் பிரபு சரியாக செய்தார்கள், அவர்களுக்கு என் முதல் நன்றி.


ஜோக்கருக்கு கிடைத்த விருதை கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் பார்க்கிறேன். இதன்மூலம் இதுபோன்ற படங்கள் அதிகளவில் வெளிவர உதவும். மனித உரிமைகள் போராளிகள் பற்றிய படம் தான் ஜோக்கர் என்று நினைக்கிறேன். இந்த விருது அவர்களுக்கான ஒரு மரியாதையை கொடுக்கும் என்று நம்புகிறேன்.


இப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும், குறிப்பாக ஹீரோ குரு சோமசுந்தரம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாட்டு பாடிய சுந்தர் மற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி''.


இவ்வாறு ராஜூ முருகன் கூறியுள்ளார்.


Advertisement
பாகுபலி அலுவலகங்களிலும் ஐடி.,  ரெய்டுபாகுபலி அலுவலகங்களிலும் ஐடி., ரெய்டு வடிவேலு, சிங்கமுத்துக்கு கோர்ட் எச்சரிக்கை வடிவேலு, சிங்கமுத்துக்கு கோர்ட் ...


வாசகர் கருத்து (3)

Ordinary Man - Mumbai ,இந்தியா
07 ஏப்,2017 - 20:46 Report Abuse
Ordinary Man Great work Sir. We expect more such movies from you sir.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
07 ஏப்,2017 - 17:46 Report Abuse
Vaal Payyan குக்கூ வுக்கே கொடுக்கலாம் அவ்வளவு சிறந்த படம் ... புது முயற்சி தொடர வாழ்த்துக்கள் ............
Rate this:
balaji - ,
07 ஏப்,2017 - 20:30Report Abuse
balajicuckoo movie la nadicha hero and heroine kuda sema act avungaluke award tandu irukulam...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum
    Tamil New Film Geminiganesanum Surulirajanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in