இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியாவில் உள்ள பிரபலமான பெண் தொழிலதிபர் ஷாநாஸ் ஹூசைன். பெண்களுக்கான மூலிகை அழகு சாதன பொருட்களை தயாரித்து பிரபலமானாவர். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது எல்லாம் வழங்கி கவுரவித்தது. சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடத்தில் உங்களது வாழ்க்கை, படமாக உருவானால் அதில் யார் நடிக்க வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷாநாஸ், என்னுடைய வாழ்க்கை படத்தில், பிரியங்கா சோப்ரா தான் நடிக்க வேண்டும், அவர் தான் பொருத்தமாக இருப்பார். அவர் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டால், எனது வாழ்க்கை படத்தையே உருவாக்க வேண்டாம் என்று சொல்லி விடுவேன் என்றார்.
ஒருவேளை யாராவது இவரது வாழ்க்கையை சினிமாவாக உருவாக்கினால் அதில் ஷாநாஸ் ஹூசைனின் ரோலில் பிரியங்கா சோப்ரா நடிப்பாரா..? என்பதை பிரியங்கா தான் சொல்ல வேண்டும்.