இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மிகுந்த எதிர்பார்ப்புடன் மோகன்லால் நடித்துள்ள '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' இன்று ரிலீசாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் சேர்த்து சுமார் 405 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது.. மோகன்லால் மேஜர் ரவி கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது படம், மேஜர் மகாதேவன் கேரக்டரில் மோகன்லால் தொடர்ந்து நடிக்கும் நான்காவது படம் என சில சிறப்பம்சங்களும் இந்தப்படத்திற்கு உண்டு..
கடந்த வாரங்களில் மலையாள சினிமாவில் வாரத்திற்கு குறைந்தது இரண்டு படங்கள் என்கிற அளவில் ரிலீஸாகி வந்தன. ஆனால் இன்றைக்கு மோகன்லாலின் படம், போட்டியாளர் யாருமின்றி தனி ஆளாக களமிறங்கியுள்ளது. அப்படி போட்டி என்று பார்த்தால் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் மம்முட்டியின் ;'தி கிரேட் பாதர்' படம் மட்டும் தான்.. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படமும் இன்று கேரளாவில் வெளியாகியுள்ளதால் அதுவும் மோகன்லால் படத்திற்கு சிறிய அளவிலான போட்டியாக இருக்கும் என்றே தெரிகிறது.