Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மேயரை மிரட்டியதாக நிவின்பாலி பட இயக்குனர் கைது..!

07 ஏப், 2017 - 13:29 IST
எழுத்தின் அளவு:
jude-anthany-joseph-has-been-arrested

நிவின்பாலி, நஸ்ரியா நடித்த 'ஓம் சாந்தி ஓசானா' படத்தை இயக்கியவர் ஜூட் ஆண்டனி ஜோசப்.. படம் இயக்குவதை விட, சமூக நிகழ்வுகளில் தனது கருத்துக்களையும் விமர்சனங்களையும் காரசாரமாக முன்வைப்பதன் மூலம் எப்போதும் ஹாட் டாபிக்கிலேயே இருப்பவர். அப்படிப்பட்டவர் தான் கொச்சி மேயர் சௌமினி ஜெயின் என்பவரை மிரட்டியதாகவும், அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.. சமூக பொறுப்புணர்ச்சி கொண்ட ஜூட் ஆண்டனி இப்படி செய்வாரா.? அப்படி என்னதான் நடந்தது..?


ஜூட் ஆண்டனி குழந்தைகள் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.. இந்த குறும்படத்தில் நிவின்பாலி கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.. இதில் சில காட்சிகளை கொச்சியில் உள்ள சுபாஷ் பார்க்கில் படம்பிடிக்க மேயரிடம் அனுமதி கேட்டுள்ளார் ஜூட் ஆண்டனி.. ஆனால் மேயரோ அனுமதி தர மறுத்துவிட்டார்.. தான் சமூக அக்கறையுடன் எடுக்கும் ஒரு படத்தக்கு கூட, அனுமதி தர மறுத்த மேயரின் செயலை கண்டித்து ஜூட் ஆண்டனி வாதம் செய்ய, அதுதான் இப்போது கைது, ஜாமீன் என்கிற அளவுக்கு கொண்டுவந்து விட்டது என்கிறார்கள்..


இத்தனைக்கும் இந்தப்படம் எடுப்பதற்கு கேரள மாநில அமைச்சர் ஸ்ரீமதி மற்றும் எம்.எல்.ஏ ஹிபி ஈடனும் தங்களது ஆதரவை அளித்துள்ளார்கள்.. இந்த விபரம் தெரிந்தும் கூட மேயர் இதனை எதிர்த்துள்ளார். மேலும் ஜூட் ஆண்டனி தன்னிடம் கோபமாக பேசியதற்கு, பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்கவேண்டும் என மேயர் கூறியதாகவும் ஆனால் ஜூட் ஆண்டனி அதற்கு மறுத்துவிட்டதால் தான் மேயர் அவர் மேல் புகார் அளித்தார் என்றும் சொல்லப்படுகிறது.. இனிமேல் எனது சமூக அக்கறை நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள போகிறேன் என விரக்தியுடன் கூறியுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in