'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
மோகன்லால் ரசிகர்கள் மட்டுமல்ல, தெலுங்கு இளம் நடிகர் அல்லு சிரிஷும் இன்று வெளியாகி இருக்கும் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படத்தின் ரிசல்ட்டை டென்ஷனுடன் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறார்.. காரணம் இந்தப்படத்தில் டேங்க் கமாண்டோவாக முக்கிய வேடத்தில் அல்லு சிரிஷும் நடித்துள்ளார்.. மலையாளத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இது.. இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
அதேசமயோம் அல்லு சிரிஷின் சகோதரர் அல்லு அர்ஜுன் இதுநாள் வரை நேரடி மலையாள படங்களில் நடித்ததில்லை.. ஆனால் தெலுங்கு ஹீரோக்களில் இவரது படங்கள் மட்டுமே கேரளாவில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வசூலை அள்ளுகின்றன. “நீங்கள்லாம் யாரு.. தெலுங்குல அத்தனை நடிகர்கள் இருக்கிறப்ப என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு பாசம் காட்டுறீங்க.. என்ன தவம் செய்தேன் நான்” என்கிற ரீதியில் சமீபத்தில் கூட கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன் நெகிழ்வுடன் பேசியிருந்தார்..
அந்தவகையில் அண்ணனைப்போல மலையாள சினிமாவில் தனக்கும் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்கிற ஆசை இவருக்கும் இருக்கிறது. அந்த ஆர்வத்தில் தான் இன்று வெளியாகியுள்ள '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படத்தின் ரிசல்ட்டை, தனது நடிப்பிற்கு கிடைக்கப்போகும் விமர்சனத்தை ஆவலுடனும் டென்சனுடன் எதிர்நோக்கியுள்ளார் அல்லு சிரிஷ்.