Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

64-வது தேசிய விருதுகள்: ஜோக்கர் படத்திற்கு விருது - தமிழுக்கு 6...!

07 ஏப், 2017 - 12:07 IST
எழுத்தின் அளவு:
National-award-for-Joker

64வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொழிவாரியாக சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராஜூ முருகன் இயக்கத்தில், குருசோமசுந்தரம் நடிப்பில் வெளியான இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குப்பெற்று விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்துவுக்கு 7-வது தேசிய விருது : சீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‛தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ‛‛எந்தப்பக்கம்... பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரமுத்து பெறும் 7-வது தேசிய விருது இதுவாகும்.


சூர்யாவின் 24 படத்திற்கு இரண்டு விருதுகள் : விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்த ‛24 படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு நிர்வாகத்திற்கான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.


மோகன்லாலுக்கு சிறப்பு விருது : ‛புலி முருகன், ஜனதா கேரஜ் மற்றும் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல ஆகிய படங்களில் நடித்த மோகன்லாலுக்கு தேர்வு குழுவின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழுக்கு ஆறு தேசிய விருதுகள் : சிறந்த படம், சிறந்த பாடகர் என ஜோக்கர் படத்திற்கு 2 விருதும், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்காக 24-க்கு 2 விருதும், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் சிறந்த எழுத்தாளர் தனஞ்செயனுக்கு தேசிய விருது உட்பட மொத்தம் தமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.


விருதுகள் விபரம் வருமாறு...


சிறந்த நடிகர் : அக்ஷ்ய் குமார் (ருஷ்டம்)


சிறந்த நடிகை : சுரபி லக்ஷ்மி(மின்னாமின்னுங்கு, மலையாளம்)


சிறந்த இயக்குநர் : ராஜேஷ் மபூஸ்கர்(படம் - வென்ட்டிலேட்டர்)


சிறந்த துணை நடிகை : சையிரா வாசீம்(தங்கல்)


சிறந்த சமூகப்படம் : பிங்க்(ஹிந்தி)


சிறந்த இசையமைப்பாளர் : பாபு பத்மநாபன்(கன்னடம்)


சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : சிவாய்


சிறந்த திரைக்கதை(ஒரிஜினல்) : சியாம் புஷ்கரண்(மகிஷிண்டே பிரதிகாரம்)


சிறந்த திரைக்கதை(தழுவல்) சஞ்சய் கிருஷ்ணாஜி(தேஷ்கிரியா)


சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் : பீட்டர் ஹெய்ன்(புலி முருகன் - மலையாளம்)


சிறந்த படத்தொகுப்பு : ராமேஷ்வர்(வென்ட்டிலேட்டர்)


சிறந்த ஒளிப்பதிவு - திரு(24)


சிறந்த பின்னணி பாடகர் : சுந்தர் ஐயர்(ஜோக்கர்)


சிறந்த பின்னணி பாடகி : இமான் சக்ரவர்த்தி


சிறந்த குழந்தைகள் படம் : தனக்(ஹிந்தி)


சிறந்த குழந்தைகள் நட்சத்திரம் : ஆதீஷ் பிரவீன்(குஞ்சு தெய்வம்), சாஜ்(நூர் இஸ்லாம்), மனோகரா(ரயில்வே சில்ரன்)


சிறந்த சுற்றுச்சூழல் படம் : தி டைகர் கூ கிராஸ்டு தி லைன்


மொழிவாரியாக சிறந்த படங்கள்...


தமிழ் : ஜோக்கர்


ஹிந்தி : நீர்ஜா


மலையாளம் : மகிஷிண்டே பிரதிகாரம்


தெலுங்கு : பெல்லி சூப்புலு


கன்னடம் : ரிசர்வேஷன்


மராத்தி : தேஷ்கிரியா


குஜராத்தி : ராங் சைடு ராஜூ


பெங்காலி : பிசர்ஜன்


Advertisement
ஹாலிவுட் பட திட்டத்தை கைவிடவில்லையாம் கமல்!ஹாலிவுட் பட திட்டத்தை ... தேசிய விருதில் புதுமை - சண்டை கலைஞர்களுக்கு விருது தேசிய விருதில் புதுமை - சண்டை ...


வாசகர் கருத்து (3)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08 ஏப், 2017 - 08:58 Report Abuse
Srinivasan Kannaiya இதன் மூலம் எல்லோருடைய வீட்டில் அடுப்பு புகைகிறதா...
Rate this:
senthil - hyd,இந்தியா
07 ஏப், 2017 - 18:15 Report Abuse
senthil மிக சிறந்த பாடல் எந்த பக்கம்
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
07 ஏப், 2017 - 12:17 Report Abuse
Vaal Payyan தகுதிமிக்க தேர்வு .... பெருமை படுவோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Abhiyum Anuvum
  • அபியும் அனுவும்
  • நடிகர் : டொவினோ தாமஸ்
  • நடிகை : பியா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிஆர் விஜயலட்சுமி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in