இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் அவரை உலகம் முழுக்க பேச வைத்தது.அந்த படத்தை பார்த்த ஹாலிவுட் பட உலகினர் பலரும் கமலை பாராட்டினர். குறிப்பாக, ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன் என்பவர், கமலுக்கு ஒரு ஹாலிவுட் படம் இயக்கி நடிக்கும் வாய்ப்பை வழங்க முன்வந்தார். ஆனால் அதன்பிறகு விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் தொடங்கிய கமல், அந்த படத்தை திரைக்கு கொண்டு வருவதில் இப்போது வரை சிக்கல் நீடித்து வருவதால் ஹாலிவுட் பட விசயத்தில் கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில், தற்போது சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல், விஸ்வ ரூபம் -2 படத்தை வெளியே கொண்டு வரும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். சபாஷ்நாயுடு படத்திற்கு முன்பே அந்த படம் திரைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், விஸ்வரூபம்-2 படம் திரைக்கு வந்த பிறகு ஹாலிவுட் படம் வேலைகளில் இறங்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம். ஆக, ஹாலிவுட் படம் இயக்கும் முயற்சி கைவிடப்படவில்லையாம். தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டி ருக்கிறதாம்