Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்-வடிவேலுவின் கலக்கல் கூட்டணி!

07 ஏப், 2017 - 11:04 IST
எழுத்தின் அளவு:
the-success-combo-is-back-in-61st-movie-of-vijai

இதற்கு முன்பு விஜய் -வடிவேலு இணைந்து காமெடி செய்த சச்சின், காவலன், சுறா உள்பட பல படங்களில் விஜய்-வடிவேலுவின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி யிருந்தது. அதனால்தான் அதன்பிறகு தான் நடித்த புலி, தெறி படங்களில்கூட வடிவேலு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விஜய். ஆனால், அந்த நேரத்தில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்கிற முடிவில் வடிவேலு இருந்ததால் அந்த முயற்சி நடக்கவில்லை. முக்கியமாக தெறி படத்தில் வடிவேலு நடிக்க வேண்டிய வேடத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்தார்.


ஆனால் தற்போது வடிவேலு மீண்டும் காமெடியனாகியிருப்பதை அடுத்து, விஜய்யின் 61வது படத்தில் அவரை புக் பண்ணியுள்ள அட்லி, வடிவேலுவிடம் 20 நாட்கள் கால்சீட் வாங்கியிருக்கிறார். அதாவது, இதுவரை அப்பா விஜய் நடித்த காட்சிகளை செட் போட்டு படமாக்கியவர், அடுத்தபடியாக இரண்டு மகன் விஜய்களின் காட்சிகளை படமாக்குகிறார். இதில் ஒரு விஜய்யின் நண்பனாக வடிவேலுவும், இன்னொரு விஜய்யின் நண்பனாக சத்யனும் நடிக்கிறார்கள்.


இதில், வடிவேலுவுடன் நடிக்கும் விஜய்யின் கேரக்டர் செம காமெடியாக சித்தரிக்கப்பட்டி ருக்கிறதாம். அதாவது சிலரை கடத்த திட்டமிடும் அவர்கள், சம்பந்தமில்லாத நபர்களை கடத்திச் சென்று விட்டு வம்பில் மாட்டிக்கொள்வது போன்ற ஒரு காமெடி ட்ராக் இந்த படத்தில் உள்ளதாம். அதில் இடம்பெறும் காமெடி காட்சிகள், இதற்கு முன்பு விஜய்-வடிவேலு நடித்த படங்களின் காமெடி காட்சிகளை மிஞ்சும் வகையில் கலக்கலான காமெடி காட்சிகளில் உருவாக்கியிருக்கிறாராம் டைரக்டர் அட்லி


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in