பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் | மீண்டும் தமிழுக்கு வரும் சமந்தா | சித்தார்த் - அதிதி ராவ் ரகசிய திருமணம்? | சத்யா ரீமேக்கில் அசோக் செல்வன்? |
கன்னடத்தில் அதிகப்படியான படங்களில் நடித்திருப்பவர் சஞ்சனா கல்ராணி. டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணியின் சகோதரியான இவர், தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வந்தபோதும் இன்னும் தனது தங்கையைப்போன்று பிரபலமாகவில்லை. இந்நிலையில், அக்காவையும் பெரிய ஹீரோயின்யாக்க வேண்டும் என்று தனக்கு நெருக்கமான சில டைரக்டர்களிடம் சிபாரிசு செய்து வந்தார் நிக்கி கல்ராணி.
ஆனால், சஞ்சனா கல்ராணிக்கு சில டைரக்டர்கள் கதாநாயகி வாய்ப்பு கொடுக்க முன்வந்தபோதும், அவர் 6.1 அடி உயரம் இருப்பதால், ஹீரோவை விட உயரமாக இருக்கிறாரே என்று சொல்லி தட்டிக்கழிக்கிறார்களாம். அதனால் இப்போது 6 அடிக்கு மேல் உயரம் கொண்ட ஹீரோக்களின் படங்களில் அக்கா சஞ்சனாவை நடிக்க வைப்ப தற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிக்கிகல்ராணி, தான் தமிழ்ப்படங்கள் விசயமாக சென்னை வரும் போதெல்லாம் அக்காவையும் உடன் அழைத்து வந்து சில உயரமான ஹீரோக்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்து வருகிறார்.