மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சித்தார்த், அமலாபால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். அதையடுத்து தற்போது கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள வீரா படத்தில் அவருக்கு ஜோடியாகி விட்டார். இந்த படத்தில் நடித்து முடித்து விட்ட அவர், அடுத்தபடியாக முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிர படவேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்.
அந்தவகையில், பல நடிகர்களை தனது டார்க்கெட்டாக வைத்துள்ள ஐஸ்வர்யாமேனனுக்கு ஆர்யாதான் முதல் டார்க்கெட்டாம். காரணம், கல்லூரியில் படித்து வந்த காலத்தில் இருந்தே ஆர்யாவின் தீவிரமான ரசிகையாம் ஐஸ்வர்யாமேனன். அதனால் புதிய படங்களுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அடுத்த படியாக ஆர்யாவை இயக்கும் டைரக்டர்கள் யார் யாரென்று தெரிந்து கொண்டு அவர்களிடம் சான்ஸ் கேட்டு துரத்தி வருகிறார். அதோடு ஆர்யாவுக்கு மட்டும் என்னை ஜோடியாக்கி விட்டால் சம்பளமே வாங்காமல்கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யாமேனன்.