இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் அமீர்கானும் ஒருவர், சில மாதங்களுக்கு முன் அவர் நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛தங்கல்'. இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றியை குவித்த தங்கல் படத்தை பாகிஸ்தானில் வெளியிடப் போவதில்லை என்று நடிகர் அமீர்கான் அறிவித்துள்ளார்.
இப்படத்தை பாகிஸ்தானில் திரையிட வேண்டுமானால் தேசியக் கொடி, தேசிய கீதம் வரும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் திரைத் தணிக்கைத் துறை கெடுபிடி விதித்துள்ளதால் படத்தை பாகிஸ்தானில் திரையிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.
‛தங்கல்' படத்தில் இடம் பெற்று இருக்கும் இந்த இரு காட்சிகளும் மிகவும் முக்கியமான காட்சிகள் அவற்றை நீக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் அமீர்கான். இந்திய படங்களுக்கு தடை விதித்திருந்த பாகிஸ்தான் அரசு, இரண்டு மாதங்களுக்கு முன் அத்தடையை நீக்கியது குறிப்பிடதக்கது.