ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் குட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'கடம்பன்'. ஆர்யா, கேத்ரின் தெரசா நடிப்பில் உருவான கடம்பன் முற்றிலும் காடு, மலைகளில் எடுக்கப்பட்ட படம். மலைகிராமங்களில் வசிப்பவர்களின் வாழ்வியலை சொல்லும் கடம்பன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
வித்தியாசமான கதையும் காட்சியமைப்பும் கொண்ட கடம்பன் படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து கடம்பன் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளை தொடங்கிவிட்டனர். ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் என தேதி உறுதியாகிவிட்ட நிலையில், கடம்பன் படம் தணிக்கைக்குச் சென்றது.
கடம்பன் படத்தைப் பார்த்த தணிக்கைகுழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளிவரும் கடம்பனுக்கு யு சான்றிதழ் கிடைத்ததில் ஆர்யா மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனம் தமிழகம் முழுக்க விநியோகம் செய்கிறது.