ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் வெற்றி பெற்ற 'பிரேம கதா சித்திரம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். அடுத்து அவர் நாயகனாக நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படமும் வெற்றிப் பட வரிசையில் இடம் பிடித்தது. ஆனால், அதற்கடுத்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த அனைத்து படங்களுமே தோல்வியடைந்தன. அதிலும் சமீபத்தில் வெளிவந்த 'ப்ரூஸ் லீ' படம் படுதோல்வியடைந்தது. இருந்தாலும் ஜி.வி.பிரகாஷ் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.
தற்போது பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படம் உட்பட “அடங்காதே, ஐங்கரன், செம, குப்பத்து ராஜா, 4ஜி” உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 'எக்கடிக்கி போத்தாவு சின்னவாடா' என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கப் போகிறார்.
எழில் இப்படத்தை இயக்க உள்ளார். எழில் தற்போதுதான் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதன் பின் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை எழில் இயக்குகிறார். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.